இயக்குனராக மாறிய தளபதி விஜயின் மகன் எடுத்திருக்கும் குறும்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில் தற்போது நடிகர் விஜயின் மகன் சஞ்சய் இயக்கிய குறும்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

அதாவது லண்டனில் மேற்படிப்பு படித்து வந்த நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் படிப்பு முடிந்த உடன் சினிமாவில் நடிக்க வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜயின் மகன் இயக்குனர் ஆவதில் தான் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது சஞ்சய் ‘புல் தி டிரிக்கர்’ என்கிற புதிய குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இதன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.