பாண்டியன் ஸ்டோரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட் அவரது மகள் தேஜுடன் எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படத்தின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

சின்ன திரையில் பிரபல நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் வெங்கட் ரங்கநாதன். இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் என்ற பிரபல சீரியலில் ஜீவா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அனைவருக்கும் ஃபேவரட் நடிகராக இருக்கும் இவர் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் அஜந்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தேஜு என்கின்ற அழகான மகள் இருக்கிறார்.

டிக் டாக் செய்வதில் அதிகமாக ஆர்வம் கொண்ட வெங்கட் தனது மகள் தேஜு உடன் இணைந்து விருமன் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் கஞ்சா பூ கண்ணால என்கின்ற பாடலுக்கு இருவரது போட்டோ ஷூட் புகைப்படங்களை இணைத்து ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அந்த அழகான வீடியோ பதிவு இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

https://youtube.com/shorts/qLPCvgj3UJ8?feature=share