அஜித் 61 படத்தில் இளம் நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.

Actor Veera Joined in Ajith 61 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து தற்போது அஜித் 61 என்ற திரைப்படம் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வருகிறது.

அஜித் 61 படத்தில் இணைந்த இளம் நடிகர்.. அதுவும் இந்த படத்தில் நடித்தவர் - வைரலாகும் தகவல்

மேலும் ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிக்கிறார். மேலும் கவின் உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது இப்படத்தில் மேலும் ஒரு இளம் நடிகர் இணைந்துள்ளார்.

அஜித் 61 படத்தில் இணைந்த இளம் நடிகர்.. அதுவும் இந்த படத்தில் நடித்தவர் - வைரலாகும் தகவல்

அதாவது ராஜதந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்த வீரா இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.