தடையில்லா ஜல்லிக்கட்டு தீர்ப்பை நடிகர் சூர்யா வரவேற்றுள்ளார்.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். திஷா பதானி கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்துடன் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா, ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்ற தீர்ப்பை வரவேற்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில், ஜல்லிக்கட்டு நமது தமிழ் கலாச்சாரத்துடன் , கம்பளா கன்னட கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்தது என்பதை உணர்த்தும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் தலை வணங்குகிறேன் என குறிப்பிட்டு பகிர்ந்து இருக்கிறார்.