ஜப்பான் திரைப்படத்தின் டீசரை பார்த்து நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 3d தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில் நடிகர் சூர்யா அவரது தம்பியும் தமிழ் சினிமாவில் பிரபலம் முன்னணி நடிகராகவும் வலம் வரும் கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் டீசர் குறித்து வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

அதாவது, நடிகர் கார்த்தி நடிப்பில் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருக்கும் ‘ஜப்பான்’ திரைப்படத்தின் டீசர் நேற்றைய தினம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி வைரலானது. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யா “ஜப்பான்’ மேட் இன் இந்தியா.. டீசர் அருமையாக உள்ளது.. முற்றிலும் வித்தியாசமான முயற்சி தம்பி.. படக்குழுவிற்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டு தனது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.