ஆக்ஷன் ஜானரில் காதலிக்கும் ஸ்டூடண்ட் சூர்யா: ‘ரெட்ரோ’ பற்றி கார்த்திக் சுப்பராஜ்
மே 1-ந்தேதி ரிலீஸாகும் ‘ரெட்ரோ’ பட அப்டேட் பார்ப்போம்..
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் ‘ரெட்ரோ’ ஷுட் முடிவடைந்து வரும் மே 1-ந்தேதி வெளியாகிறது.
இப்படம், தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என நம்பிக்கையாக இருக்கின்றார் சூர்யா. இந்நிலையில் ‘ரெட்ரோ’ பற்றிப் பேசிய கார்த்திக் சுப்புராஜ், ‘இப்படம் காதல், காமெடி, ஆக்சன் என மூன்றும் சேர்ந்த கலவையாக இருக்கும். காதலை கதைக்களமாக கொண்டு உருவாக்கியுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ‘ரெட்ரோ’ படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அதில் ஒரு புகைப்படத்தில் சூர்யாவின் பழைய போட்டோ ஒன்று காண்பிக்கப்படுகிறது. இதை வைத்து பார்க்கையில், இப்படத்தில் சூர்யா ஒரு சில காட்சிகளில் இளைஞராக நடித்திருப்பார் என தெரிகின்றது.
அதாவது சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் கல்லூரியில் படிக்கும் இளைஞராக வருவதை போல, இப்படத்திலும் சூர்யா வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.