YouTube video

Actor Sivakarthikeyan Marana Troll On Instagram Stories

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக இடம் பிடித்துள்ளார்.

தல அஜித்தை போலவே தன்னம்பிக்கையும் விடாமுயற்சியையும் மட்டுமே நம்பி வந்த இவர் எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளார்.

தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்டர் படத்தில் நடித்துள்ளார்.

ஜில்லுனு ஒரு காதல் சூர்யாவின் மகளா இது? புடவையில் பேரழகியாகவும் மாடர்ன் உடையில் கவர்ச்சியாகவும் மாறிய நடிகை – வைரலாகும் புகைப்படங்கள்.!

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போற போக்கில் ஒரு போட்டோ ஷூட் என ஏற்கனவே ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து தற்போது மீண்டும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் போற போக்குல ஒரு போட்டோ ஷூட் என இன்னொரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் செம ட்ரெண்டாகி வருகிறது.

சிவகார்த்திகேயனின் இந்த புகைப்படத்தை பார்த்த டாக்டர் பட இயக்குனர் நெல்சன் போற போக்குல ஒரு போட்டோ ஷூட்டை எப்படி இருக்குன்னு பிளான் பண்ணி எடுத்தால் எப்படி இருக்கும் என சிவகார்த்திகேயனைக் அளித்துள்ளார்.

இதனையடுத்து இருவரும் மாறி மாறி பதில் அளித்து கொள்ள இன்ஸ்டாகிராம் பக்கமே சில மணிநேரம் கலகலப்பாகி உள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.