திரையுலகில் அடுத்த அதிர்ச்சியாக அசுரன் பட நடிகர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

Actor Nitish Passes Away : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் நாளுக்கு நாள் பல திரையுலக பிரபலங்கள், சாதாரண மக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மரணம் அடைந்து வருவது திரையுலகினரை மீளா துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.

திரையுலகில் அடுத்த அதிர்ச்சி.. அசுரன் பட நடிகர் நிதீஷ் கொரானாவால் உயிரிழந்தார்.!!

நேற்றிரவு கனா பட இயக்குனர் அருண் ராஜா காமராஜ் அவர்களின் மனைவி மரணமடைந்த இருந்த நிலையில் இன்று அசுரன், வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நிதீஷ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அசுரன் படத்தில் இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.