‘கார்த்தி-29’ படத்தில் இணைகிறார் நானி: கதை குறித்து அப்டேட்
கார்த்தியின் 29-வது படத்தின் தகவல்கள் காண்போம்..
‘மெய்யழகன்’ பட வெற்றியை தொடர்ந்து, தற்போது கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியாரே’ படமும் உருவாகி வருகிறது. கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். காமெடி ஜானரில் எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில், கார்த்தி தனது 29-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் நானி கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான ‘ஹிட் 3’ படத்தில் கார்த்தி கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். கிளைமேக்ஸ் காட்சியில் தோன்றி ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி அளித்திருந்தார். இதனையடுத்து ஹிட் 4- பாகத்தில் கார்த்தி லீட் ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடல் சார்ந்த கதைக்களமாக இப்படத்தினை தமிழ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடல் பின்னணியில் கேங்ஸ்டர் பின்னணியில் கார்த்தி-29 படம் உருவாகவுள்ளது. வடிவேலு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார்.
தற்போது இப்படத்துக்காக ராமேஸ்வரத்தில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு வருகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது. மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள கைதி-2 படமும் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.