Web Ads

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ஹீரோவாக சூரி படம்: இயக்குனர் யார் தெரியுமா?

சூரியை வைத்து லோகேஷ் தயாரிக்கவுள்ள படம் பற்றிப் பார்ப்போம்..

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவானவர் சூரி என்பது தெரிந்ததே.

இதனைத் தொடர்ந்து கருடன், கொட்டுக்காளி, மாமன் என அனைத்துப் படங்களுமே வெற்றியடைந்து உள்ளன. அடுத்ததாக ‘மண்டாடி’ என்கிற படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். படகு பந்தயத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் சூரி.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி உள்ளது. ‘விடுதலை’ படத்தை தயாரித்த எல்ரெட் குமார் ‘மண்டாடி’ படத்தையும் தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து சூரிக்கு செம வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, அவருடைய நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்க உள்ளார்
மலையாள திரையுலகில் ‘அங்கமாலி டைரீஸ்’ ‘ஜல்லிக்கட்டு’ போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனரான லிஜோ ஜோஸ் பெலிசேரி இயக்க உள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கடந்த ஆண்டு ‘ஃபைட் கிளப்’ படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து, அவர் தயாரிப்பில் ‘பென்ஸ்’ என்கிற படம் உருவாகி வருகிறது. இப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். ராகவா லாரன்ஸ், நிவின் பாலி ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, சூரி நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளார் பென்ஸ் படம் முடிந்ததும் சூரி படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.