Actor Karthik Admitted in Hospital

உடற்பயிற்சி செய்யும் போது நடந்த விபரீதத்தால் நவரச நாயகன் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Actor Karthik Admitted in Hospital : தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வலம்வந்தார் நவரச நாயகன் கார்த்திக். இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இதனையடுத்து படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து அரசியலில் அதிமுகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். ஏற்கனவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் தற்போது போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் உடற்பயிற்சி செய்ய போது தவறி கீழே விழுந்துள்ளார்.

பிரம்மனும், பிரபஞ்சமும் : சில தகவல்கள்

ஏற்கனவே ஒரு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த Special Tea-ல இவ்வளோ விஷயம் இருக்கா? – தரமான Tea & Snacks in Chennai | Glassmates