தனுஷ் நடிப்பில் ‘குபேரா’ படம் பற்றி பப்ளிக் ரிவ்யூ
தனுஷ் நடிப்பில் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ‘குபேரா’ படத்தின் பப்ளிக் விமர்சனம் பற்றிப் பார்ப்போம்..
* ரசிகர் ஒருவர் தெரிவிக்கையில், ‘படத்தின் முதல் பாதியோடு ஒப்பிடும்போது இரண்டாம் பாதி படம் சூப்பராக உள்ளது. படம் முழுவதும் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா என பலரும் நன்றாக நடித்துள்ளார்கள். படம் மூன்று மணி நேரம் ஓடினாலும் நன்றாக உள்ளது. தனுஷின் நடிப்பு தான் படமே’ என தெரிவித்துள்ளார்.
* மற்றொரு ரசிகர் கூறும்போது, ‘தனுஷ் சிறப்பாக நடித்துள்ளார். சிறப்பான கதை. தனுஷ் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். இந்த படத்திற்கு அவருக்கு தேசிய விருது கிடைக்கலாம். அப்படியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்’ என தெரிவித்தார்.
* மற்றொருவர் கூறும்போது, ‘படம் ரொம்ப நன்றாகஉள்ளது. படம் ஸ்லோவா சென்றாலும் சிறப்பாக உள்ளது. வித்தியானமா கதையமைப்பு, எதிர்பாராத திருப்பங்கள்.
படத்தில் எங்குமே தொய்வு இல்லை. தனுஷ் சிறப்பாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் சிறப்பாக இசையமைத்துள்ளார். மூன்று மணி நேரத்திற்கு தகுதியான படம். படம் வொர்த்’ என தெரிவித்துள்ளார்.
* இன்னொரு ரசிகர் கூறும்போது. ‘படம் அருமையாக உள்ளது. ஃபேமிலி ஆடியன்ஸ் பார்க்க பக்காவான படம். சினிமாவுக்காக பிச்சை எடுக்கிற காட்சியில் யாரும் நடிக்க தயங்குவர். ஒரு ரசிகராக மிகவும் எமோஷனலாக உள்ளது. குப்பைத் தொட்டியில் பொறுக்கும் காட்சி எல்லாம் கண்ணீர் வந்துவிட்டது. தரமான படம்’ என்றார்.
* இன்னொருவர் பேசும்போது, ‘இந்த படம் கட்டாயம் பந்தயம் அடிக்கும் அளவுக்கு உள்ளது. எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக உள்ளது. நல்ல படம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் கட்டாயம் இந்த படத்தை பார்க்க வரலாம்’ என தெரிவித்துள்ளார்.
* மற்றொரு ரசிகர் தெரிவிக்கையில், ‘படத்தின் கதை நன்றாக உள்ளதுன்றாக . தனுஷ்க்கு மாஸ் காட்சிகள் எதுவும் இல்லை. தனுஷ், நாகர்ஜுனா, சேகர் கம்முலா என மூவரும் தங்களது பங்கிற்கு படத்தை தரமாக உயர்த்தியுள்ளனர். படத்தில் சொல்ல வந்த கருத்து சூப்பர். ராஷ்மிகாவும் வித்தியாச ரோலில் நன்றாக நடித்துள்ளார். மூன்று மணி நேரம் ஓடுகிறது. கொஞ்சம் நேரத்தை குறைத்திருக்கலாம். சிறந்த நடிக்கருக்கான விருது தனுஷுக்கு இப்படத்தில் எதிர்பார்க்கலாம்’ என்றார்.