Web Ad 2

‘ஜனநாயகன்’ பட போஸ்டர் மற்றும் கிலிம்ஸ் வீடியோ: ரசிகர்கள் ஆர்வம்

Web Ads

விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கும் இப்படம், அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி வெளியாகிறது.

இந்நிலையில், விஜய் பிறந்தநாள் இன்னும் ஓரிரு நாட்களில் வரவுள்ளது. எனவே, அவர் தற்போது நடித்து முடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திலிருந்து ஏதேனும் ஒரு அப்டேட் கண்டிப்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வகையில், இன்று படக்குழு ஒரு முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

படத்திலிருந்து ஸ்பெஷலான போஸ்டர் வெளியாகுமா அல்லது கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகுமா என ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.

சிங்கிள் பாடலாக இருந்தால் கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு அதைவிட மிகப்பெரிய ட்ரீட் வேறெதுவும் இருக்க முடியாது. ஜனநாயகன் டீம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கிலிம்ப்ஸ் வீடியோவை வெளியிடுவார்கள் என ரசிகர்களால் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

முன்னதாக, படத்தை பற்றி நாயகியாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டே தெரிவிக்கையில், ‘ஜனநாயகன் படம் ரசிகர்களை தாண்டி அனைவருக்கும் பிடிக்கும்’ என தெரிவித்திருந்தார். மேலும் இப்படம், தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ என்ற படத்தின் ரீமேக் அல்ல எனவும் படக்குழு உறுதிபட தெரிவித்துள்ளது. இச்சூழலில், இன்று மாலைக்குள் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவிருக்கும் ஜனநாயகன் படத்தின் அப்டேட் என்ன என்பது தெரிய வரும், பார்க்கலாம்.

jananayagan movie update and vijay birthday