ஆர்த்தி குறித்து ரவிமோகன் பெருமிதம்: வைரலாகும் நிகழ்வு
ரவி மோகனும் ஆர்த்தியும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவிருக்கிறார்கள். இச்சூழலில் ஆர்த்தி குறித்து ரவிமோகன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
ரவிக்கும், ஆர்த்திக்கும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு மகன்களில் ஆரவ் என்பவர் ரவியுடன் சேர்ந்து ‘டிக் டிக் டிக்’ படத்த்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு தனது தோழி கெனிஷாவுடன் வருகை தந்திருந்தார். அதனைப் பார்த்த ஆர்த்தி, எமோஷனலாக அறிக்கையை வெளியிட்டிருந்தார். பிறகு, ரவியும் ஒரு அறிக்கை விட்டார்.
ரவி ஏற்கனவே விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஆர்த்தி, ‘தனக்கு மாதா மாதம் 40 லட்சம் ரூபாயை ஜீவனாம்சமாக ரவி மோகன் வழங்க வேண்டும்’ என நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஆர்த்தி குறித்தும் தனது மகன்கள் குறித்தும் முன்னதாக ரவி மோகன் பேசிய வீடியோ ஒன்று திடீரென வைரலாகி வருகின்றது. அந்த விழாவில் பேசிய ரவிமோகன், ‘என்னுடைய பிள்ளைகளுக்கு எனது முகத்தை பார்க்கும்போது அப்பா, அப்பா என்று அவ்வளவு ஆனந்தம். என்னை உண்மையாகவே ஒரு ஹீரோவாக பார்க்கிறார்கள். அதேபோல் என்னுடைய பேபி (ஆர்த்தி).
ஒவ்வொரு நாளும் அவங்க எனக்காக செய்வதில் தொடங்கி எல்லா விஷயத்திலும் என்கூடவே இருக்காங்க. அவங்க இல்லைனா நான் இப்படி இருப்பேனானு தெரியவில்லை’ என கூறியுள்ளார்.