நடிகர் சியான் விக்ரமின் தங்கலான் படத்தின் புது கெட்டப் புகைப்படம்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக விளங்கி வருபவர் சியான் விக்ரம். டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ள இவரது நடிப்பில் வெளியாகும் பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வெற்றியை பெற்றுள்ளன. சியான் விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான மகான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படம் வெளியாக உள்ளது.

மாளவிகா மோகனன் உட்பட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் கேஜிஎப் படத்தில் இடம்பெறும் மனிதர்களின் வாழ்க்கையை பற்றியதாக இருக்கும் என இயக்குனர் பா ரஞ்சித் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். தற்போது படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் பிஸியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பெரிய தாடி, பெரிய பொறுப்பு’ என்ற வாசகத்துடன் இப்படத்திற்கான கெட்டபின் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார். முன்னதாக இவரது நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படம் சரியாக ஓடாத நிலையில், இந்தப் படத்தின் மீது உள்ள அழுத்தம் அதிகரித்துள்ளது. தற்போது இவரது இந்த லேட்டஸ்டான கெட்டபின் புகைப்படத்தை பார்க்கும் போது தங்களான் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.