நடிகர் ஆர்யாவின் ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை
ஆர்யா, வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்..
ஆர்யா தற்போது ‘அனந்தன் காடு’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.
நடிப்பது மட்டுமின்றி ‘தி ஷோ பீப்பிள்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலமாக ‘அமர காவியம்’, ‘ஜீவா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, ‘ரெண்டகம்’, ‘கேப்டன்’, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். 2024 ஆம் ஆண்டு வெளியான ‘1000 பேபிஸ்’ என்கிற மலையாளம் தொடரையும் தயாரித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்யா – சாயிஷா தம்பதிகளுக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. நடிப்பது, சினிமா தயாரிப்பது என்று இல்லாமல் உணவகம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய தொழில்களிலும் ஆர்யா ஈடுபட்டு வருகிறார்.
நடிப்பதை விடவும் தனது சொந்த தொழில்களில் ஆர்யா அதிக கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யாவும் நடிப்புத் துறையில் இருந்து விலகி, ஆர்யாவின் தொழில்களை கவனித்து வருகிறார்.
ஆர்யாவுக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஸீ ஷெல் என்கிற பெயரில் ஹோட்டல்கள் இயங்கி வருகிறது. இந்த உணவகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வேளச்சேரி, கொட்டிவாக்கம், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் ஆர்யாவின் ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனையைத் தொடங்கியுள்ளனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாகவும் ஆர்ய மீது புகார் எழுந்தது. இதையடுத்து, கொச்சியில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் ஆர்யாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணா நகரில் உள்ள உணவகத்தில் மூன்று வாகனங்களில் வந்து சோதனையைத் தொடங்கியுள்ளனர்.