சீரியல் மாமியார் ஆன பிரியா ராமனுக்கு க்யூட்டாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஷபானா..!
சீரியலில் மாமியாராக நடித்த பிரியா ராமனுக்கு கியூட்டாக பிறந்தநாள் வாழ்த்து சொல்லியுள்ளார் ஷபானா.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா. அதே சீரியலில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா ராமன். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் இரண்டு பேரும் போட்டியாளர்களாக பங்கேற்ற உள்ளனர்.
இந்த நிலையில் பிரியா ராமனுக்கு பிறந்தநாள் என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எடுத்த வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் எனக்கு மிகவும் நெருக்கமான நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மிகுந்த இறக்கம் கொண்டது நீங்கள் காட்டும் அன்பு அது எதையும் எதிர்பார்க்காமல் அனைத்தையும் தருகிறது கடினமான சூழ்நிலைகளிலும் அது மாறாமல் இருக்கிறது இதற்கு இறுதிக்காலம் வரை நன்றி கடன் பட்டுள்ளேன். அழகான ஆன்மாவுடைய உங்களை நாங்கள் கொண்டாடுகிறோம் நான் விரும்பும் அளவுக்குப் புகழும் உங்களை விரும்புகிறான் என பதிவிட்டு நடிகர் புகழுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரியா ராமனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram