நடிகர் அல்லு அர்ஜூன், அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா, இல்லையா?: வைரலாகும் கேலிகள்..
நாளை புஷ்பா-2 படம் உலகெங்கிலும் ரிலீஸ் ஆகிறது. இச்சூழலில், அல்லு அர்ஜூன் அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா இல்லையா என்ற விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்துப் பார்ப்போம்..
டோலிவுட் மெகா ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கு பான் இந்தியா ஹீரோ அந்தஸ்தை கொடுத்து மேலும் உயர்த்தியது. பிரபாஸுக்குப் பிறகு, இந்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பாவில் நடித்ததற்காக, தேசிய விருதைப் பெற்றார்.
இந்நிலையில், நாளை டிசம்பர் 5-ம் தேதி புஷ்பா 2 வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் மூலம் அல்லு அர்ஜுன் 1000 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைய வாய்ப்புள்ளது.
இத்தகு பெரிய புகழைப் பெற்ற அல்லு அர்ஜுன் ஒரு விஷயத்தில் தொடர்ந்து கேலி செய்யப்படுகிறார். அதாவது, அல்லு அர்ஜுன் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்தக் கோணத்தில் அல்லு அர்ஜுனை மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கேலி செய்கிறார்கள்.
அல்லு அர்ஜுன் உண்மையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா இல்லையா என்பதை பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜசேகர் தெளிவுபடுத்தி இருக்கிறார். அதில் அல்லு அர்ஜுனின் பழைய புகைப்படங்களை பார்த்த அவர், ‘அல்லு அர்ஜுன் அறுவை சிகிச்சை செய்தது உண்மைதான்’ என கூறியிருக்கிறார்.
குறிப்பாக அவர், ‘ மூக்கு மற்றும் உதடுகளுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தெரிவதாக’ அவர் தெரிவித்துள்ளார். டாக்டர் ராஜசேகரின் கருத்துகளை நெட்டிசன்கள் வைரலாக்கினர். ஆனால், அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இதை திட்டவட்டமாக மறுத்து வலைதளங்களில் மல்லுக்கட்டி வருகின்றனர்.
எப்படியோ, அழகு என்பது முகத்தில் தெரிவதல்ல; அது அகத்தில் இருப்பது என உணர்ந்தால் சரி.!