மம்முட்டி-கவுதம் வாசுதேவ் கூட்டணியில், ‘டாமினிக் லேடீஸ் பர்ஸ்’ டீசர் வெளியீடு..
நீண்ட இடைவெளிக்கு பிறகு, கவுதம் வாசுதேவ் இயக்கும் புதிய படத்தின் டீசர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்..
கவுதம் வாசுதேவ் மேனன், ‘மின்னலே’ என்ற தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த ஸ்டைலிஷ் இயக்குர். அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் என ஏகப்பட்ட படங்கள் ஹிட்டடித்தன. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் காதலை அழகாகப் பேசி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தற்போதும் அவரது படங்கள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், விஜய்யுடன் அவர் ‘யோஹன்’ படத்தில் இணையவிருந்தார். ஆனால், அந்தப் படம் கைவிடப்பட்டது. பின்னர், அஜித்துடன் இணைந்து ‘என்னை அறிந்தால்’ படம் செய்தார். அந்தப் படமும் அஜித்தின் திரைப் பயணத்தில் வித்தியாசமான படமாக இருந்தது.
காலச் சுழற்சியில், இயக்கத்திலிருந்து ஒதுங்கிய அவர் நடிப்பில் பிஸியானார். அவ்வகையில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், லியோ, கருமேகங்கள் கலைகின்றன என பல படங்களில் நடித்தார். இன்னும் சில படங்களில் நடித்தும் வருகிறார். இயக்கம் போலவே நடிப்பிலும் தனது திறமையை தனித்துவமாக காண்பித்து வருகிறார்.
இந்தச் சூழலில், அவர் மீண்டும் படம் இயக்க வரவேண்டும் என அவரது ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள். அந்த ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக, மம்முட்டியை வைத்து ‘டாமினிக் லேடீஸ் பர்ஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
நீண்ட நாட்கள் கழித்து கௌதம் இயக்கம் என்பதாலும், மம்முட்டியுடன் முதன்முறை அவர் இணைவதாலும் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், செம ஸ்டைலிஷாக இருந்தது.
இந்நிலையில், இந்தப் படம் பற்றிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார் கௌதம் மேனன். அதன்படி, படத்தின் டீசர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால், கவுதம் ரசிகர்கள் ஹேப்பி மூடில் உள்ளனர்.