ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா-திரிஷா ஆக்டிங்; கோவையில் கோலாகலம்..
‘கங்குவா’ தோல்விக்கு பிறகு, சூர்யாவின் எதிர்பார்ப்பில் இதோ அடுத்தடுத்து இரண்டு விறுவிறுப்பாய் வரவிருக்கின்றன. அவை பற்றிய விவரம் பார்ப்போம்..
நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தை தொடர்ந்து, ‘சூர்யா 44’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. கார்த்திக் சுப்புராஜ் இயக்க, பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள இப் படத்தின் சூட்டிங் அந்தமான், ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், கல்ட் என்ற டைட்டிலை கார்த்திக் சுப்புராஜ் யோசித்ததாகவும் ஆனால், அந்த டைட்டலை பதிவு செய்துள்ள நடிகர் அதர்வா தர மறுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, சூர்யா 44 படத்திற்கு வேறு ஒரு டைட்டிலை படக்குழுவினர் யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘சூர்யா 44’ படத்தை சூர்யா அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இந்நிலையில், அடுத்ததாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா இணைந்துள்ள ‘சூர்யா 45’ படத்தின் ஷூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் உள்ள மாசாணி அம்மன் கோயில் பூஜையுடன் துவங்கியுள்ளது. படத்தில் சூர்யாவுடன் திரிஷா, சுவாசிகா நட்ராஜ் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாக கூறப்பட்ட மாசாணி அம்மன் கதைக்களத்தில் தான் சூர்யா தற்போது இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவையில் தற்போது இந்த படத்தின் சூட்டிங்கில் நடிகை திரிஷா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக பிரம்மாண்டமான வகையில் கோவில் செட் போடப்பட்டு உள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
‘ஆறு’ படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் இந்த படத்தில் திரிஷா இணைந்துள்ளார். பல ஆண்டுகள் கழித்து இவர்கள் மீண்டும் இணைந்துள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் இணையதளத்தில் வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது.