பிக்பாஸ் வீடு என் மாமியார் வீடு எனவும் தன்னுடைய நண்பரை செருப்பால அடி நாயே எனவும் தகாத வார்த்தையில் லைவ் வீடியோவில் பேசியுள்ளார் அபிஷேக் ராஜா.

Abishek Raja in Video After 2nd Eviction : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இரண்டாவது வாரத்தில் வெளியேறியவர் அபிஷேக் ராஜா.

திரைப்பட விமர்சகர், தொகுப்பாளரான இவர் மற்ற போட்டியாளர்களை influence செய்து விளையாடியதால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு இவர் ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்டார்.

இரண்டாவது முறையாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிஷேக் ராஜா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் லைவ் வந்துள்ளார். அந்த வீடியோவில் இரண்டாவது முறையாக என் மாமியார் வீட்டுக்கு போயிட்டு வந்த பிறகு சாரி பிக் பாஸ் வீட்டுக்கு போயிட்டு வந்த பிறகு என வீடியோவை தொடங்குகிறார். அதாவது பிக்பாஸ் வீட்டை மாமியார் வீடு என கூறியுள்ளார் அபிஷேக் ராஜா.

நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் – Director SS Rajamouli Press Meet | RRR Movie Press Meet

மேலும் இவர் லைவ் வீடியோவில் பேசிக்கொண்டிருந்தபோது இடையில் வந்த தன்னுடைய நண்பரை செருப்பால அடி நாயே என தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

ஸ்ரீ ரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் கேளாயோ.!

https://www.instagram.com/tv/CXS3_mSIkcK/?utm_source=ig_web_copy_link ‌‌