இந்த வாரம் ஓட்டிட்டியில் வெளியாகப் போகும் படங்களின் லிஸ்ட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் படங்களை எவ்வளவு பார்த்து ரசிக்கிறார்களோ அதே வகையில் OTT யின் எதிர்பார்ப்புகளும் அதிகமாகி கொண்டு வருகிறது. திரையில் பார்த்து ரசிப்பது ஒரு சந்தோஷம் என்றாலும் வீட்டிலிருந்த பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருப்பது அவசியமான ஒன்று.
அந்த வகையில் இந்த வாரம் வெளியாக போகும் தமிழ் படங்கள் குறித்து பார்க்கலாம்.
பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து மாபெரும் ஹிட் கொடுத்த தங்கலான் திரைப்படம் நாளை netflix தளத்தில் வெளியாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து “பேச்சி” என்ற திரைப்படம் ஆஹா தளத்திலும்,”தலைவெட்டியான் பாளையம்” என்ற திரைப்படம் அமேசான் பிரைம் தளத்திலும் நாளை வெளியாக உள்ளது.
இந்த மூன்று தமிழ் படங்களில் நீங்கள் எந்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.