கேம் சேஞ்சர் படத்தின் லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்துள்ளார் தமன்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ராம்சரண் இவரது நடிப்பில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
சங்கர் இயக்கத்திலும் ,ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பிலும், உருவாகி வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா, அஞ்சலி, சமுத்திரகனி என பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். கிறிஸ்மஸ் தினத்தன்று இந்த படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த படத்திற்கான பின்னணி இசை பணிகள் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கும் என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.