Aari About Ajith Behaviour in Election

ஓட்டு போட சென்ற இடத்தில் ரசிகரின் போனை பறித்தது குறித்து ஆரி பதிலளித்துள்ளார்.

Aari About Ajith Behaviour in Election : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற போது அங்கே செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்துக்கொண்டு தல அஜித். இந்த காட்சி சமூக வலைதளங்களில் தீயாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் தல அஜித் அந்த ரசிகருடன் செல்போனை திருப்பிக் கொடுத்து மாஸ்க் அணியுங்கள் என அறிவுரை வழங்கி இருந்தார். இந்த நிலையில் தற்போது தல அஜித் இவ்வாறு செய்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது பிக் பாஸ் ஆரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகர்கள் இது போன்ற பொது இடங்களுக்குச் செல்லும்படி ரசிகர்கள் அவர்கள் மீது கொண்ட அன்பினால் இவ்வாறு செய்கிறார்கள். அஜித் கூட்டத்தில் செல்போனை பறித்ததை மட்டும் பார்க்காமல் அதை அதே கூட்டத்தில் திருப்பிக் கொடுத்த பண்பையும் கவனிக்க வேண்டும் என பேசியுள்ளார்.