அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும் என சொல்லும் வகையில் குட்டி தல ஆத்விக்கின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் துணிவு.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக அஜித் 62 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்க உள்ள நிலையில் குட்டி தல ஆத்விக்கின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதாவது நடிகை ஷாலினி ஆத்விக் மற்றும் சில குழந்தைகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் சென்னை எப் சி கால்பந்தாட்ட அணிக்கு ஆதரவளிப்பது போன்ற டீ சர்ட்டில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அஜித்தை போலவே ஆத்விக்கிற்கும் ஸ்போர்ட்ஸில் அதிக ஆர்வம் இருப்பதாக கருத்து கூறும் வருகின்றனர். அஜித் ரத்தம் அப்படித்தான் இருக்கும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.