பாட்ஷாவை விட இரு மடங்கு ஹிட் அடிக்கும் என ஜெயிலர் ஷோகேஸ் வீடியோவை பார்த்து பதிவு செய்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தின் டீசர் வெளியாகி பட்டையை கிளப்பியதை தொடர்ந்து ஷோகேஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்த வீடியோ குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த வீடியோ குறித்து பதிவு செய்துள்ளார். அது குறித்த பதிவில் ஷோகேஸ் வீடியோவை பார்த்து ரஜினி ரசிகராக நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எனக்கு பிடித்த படங்களில் ஒன்றான பாட்ஷா ஏற்படுத்திய அதே உற்சாகம் இந்த படத்திலும் உள்ளது. பாட்ஷா படத்தை விட டபுள் ஹிட்டாகும். நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியை இப்படி காட்டியதற்கு நெல்சன், சன் பிக்சர்ஸ், அனிரூத் உள்ளிட்ட குழுவினருக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.