‘மரகத நாணயம்-2’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

Web Ads

பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி மற்றும் RDC மீடியா இணைந்து வழங்கும் ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சாபமிடப்பட்ட மரகதக் கல், குறும்புத்தனமான ஆவிகள், நகைச்சுவை மற்றும் சாகசம் என வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ARK சரவணன், தற்போது அதன் இரண்டாம் பாகத்தையும் எழுதி இயக்கியுள்ளார்.

முதல் பாகம் வெளியாகி ஒன்பது ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், ‘மரகத நாணயம் 2’ குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இப்படம் குறித்து இயக்குநர் ARK சரவணன் கூறுகையில், “மரகத நாணயம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் மீண்டும் இடம்பெற்றுள்ளனர். ஆதி, பிரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி, டேனியல் ஆனே போப், முனிஷ்காந்த், அருண்ராஜா காமராஜ், ஆனந்தராஜ் மற்றும் முருகானந்தம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவரும் கதையில் எப்படித் தொடர்பு கொள்கிறார்கள், எந்தச் சூழலில் அனைவரும் ஒன்றிணைகிறார்கள் என்பது ரசிகர்களுக்குப் படத்தில் கிடைக்கும் சர்ப்ரைஸாக இருக்கும். முதல் பாகத்தில் ரசிகர்கள் ரசித்த நகைச்சுவை, சாகசம், ஆக்‌ஷன் என அனைத்தும் இரண்டாம் பாகத்திலும் இடம்பெறும். இதனுடன் பல சுவாரஸ்யமான அம்சங்களும் உள்ளன.

Web Ad 2

டிரெய்லரில் படத்தின் சிறிய முன்னோட்டம் மட்டுமே வெளியாகும். ஆனால், படம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. முதல் பாகத்தில் நிக்கி கல்ராணியின் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்திருந்தது. அதேபோல், இந்தப் பாகத்திலும் அவருக்கு வலுவான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது. படம் வெளியாகும்போது அதன் சிறப்பை ரசிகர்கள் உணர்வார்கள்” என்றார்.

‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தை சுதன் சுந்தரம், தேவ், கே.வி. துரை, மனிஷ் சிங்கள் மற்றும் துர்கம் சௌத்ரி ஆகியோர் பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி மற்றும் RDC மீடியா நிறுவனங்களின் சார்பில் தயாரித்துள்ளனர்.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.