பீல் மை லவ் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படமான ‘ஃபீல் மை லவ்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பல தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்தவரும், பல பான் இந்தியா திரைப்படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் A.N. பாலாஜி, முதன்முறையாக தமிழில் தயாரிக்கும் திரைப்படம் ‘ஃபீல் மை லவ்’.
ஹரி பிரகாஷ் எம் எழுதி இயக்கும் இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ், பிரியங்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், மதுசூதனன் ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற எம்.எஸ். சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜரவிவர்மா எஸ் மற்றும் பாலசுப்ரமணியன் ஜி இணைந்து இசையமைக்கின்றனர். அஜய் மனோஜ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.
“வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் ஒரு அதிசயம் நிகழலாம்” என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். சுவாரஸ்யமான தருணங்கள், இயல்பான உறவுகள், ஆழமான உணர்வுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் தனித்துவமான காதல்-நகைச்சுவை திரைப்படமாக ‘ஃபீல் மை லவ்’ இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.
