அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

Web Ads

அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்; ஜூலை 3 ரிலீஸுக்கு தயாராகும் பிரம்மாண்ட படம்

இயக்குநர் அபிஷேக் நாமாவின் கனவுத் திட்டமாக உருவாகியுள்ள ‘நாகபந்தம்’ திரைப்படம், வரும் ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி, படத்தின் புரமோஷன் பணிகள் வித்தியாசமான முறையில் தொடங்கப்பட்டுள்ளன.

NIK ஸ்டூடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்தப் படத்தின் விளம்பர நிகழ்வாக, ஹைதராபாத்தில் அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரை கோலாகலமாக தொடங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வு திரைப்பட புரமோஷனைத் தாண்டி, கலாசாரம் மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக அமைந்தது.

நிகழ்ச்சியில் பேசிய நாயகன் விராட் கர்ணா, கனமழையையும் பொருட்படுத்தாமல் திரண்டிருந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் முழுக் குழுவும் இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளது. ஜூலை 3ஆம் தேதி திரையரங்குகளுக்கு வந்து, இந்த நிகழ்விற்கு வழங்கிய அன்பையும் ஆதரவையும் எங்கள் படத்திற்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன். இந்த ரதயாத்திரை பல நகரங்களில் தொடரும். ரசிகர்கள் ‘நாகபந்தம்’ படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

மேலும், தன்னை இந்தக் கனவுத் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தேர்வு செய்த இயக்குநர் அபிஷேக் நாமாவிற்கும், படத்தை தைரியமாக ஆதரித்த தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டிக்கும் நன்றி தெரிவித்தார்.

இயக்குநர் அபிஷேக் நாமா பேசுகையில், “இது ஒரு திரைப்பட விளம்பர நிகழ்ச்சி மட்டுமல்ல. நமது கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வேர்களுடன் மீண்டும் இணையும் முயற்சி. அதை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் இந்த ரதயாத்திரையை தொடங்கியுள்ளோம்” என்றார்.

மேலும், “விராட் கர்ணா இந்தப் படத்திற்காக அளவற்ற அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார். பல சவால்களையும் உடல்நலப் பிரச்சினைகளையும் தாண்டி அவர் செய்த உழைப்பு ரசிகர்களை நிச்சயம் கவரும். நபா நடித்துள்ள கதாபாத்திரமும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். ஜுனைத் மற்றும் அபி அமைத்துள்ள இசையும் ரசிகர்களை கவரும்” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, அனந்த பத்மநாப சுவாமியின் பிரம்மாண்ட சிலை திறந்து வைக்கப்பட்டது. ஆன்மிக உணர்வை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட அந்த சிலை, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

புராணம், ஆன்மிகம் மற்றும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளுடன் உருவாகியுள்ள ‘நாகபந்தம்’, ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Abhishek Nama’s ambitious project Nagabandham