ஆண்பாவம் பொல்லாதது.. மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!
ஆண்பாவம் பொல்லாதது படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

aan paavam pollathathu movie 3 days collection
தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரியோ. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது.
அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருந்தார் மேலும் விக்னேஷ் காந்த், ஷீலா ,ராஜ்குமார் , ஜென்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களில் 4.1 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

aan paavam pollathathu movie 3 days collection
