துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் அஜித்: வைரலாகும் நிகழ்வு..

Web Ads

அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அஜித்குமார் கார் ரேஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார். சொந்தமாக கார் ரேஸிங் பந்தய நிறுவனத்தையும் அவர் உருவாக்கியுள்ளார்.

இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. இந்த படம் ஜனரஞ்சகமான கமர்ஷியல் படமாக அமையும் என ஆதிக் கூறியிருந்தார்.

புதிய படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அஜித் தனது குடும்பத்தினருடன் பாலக்காட்டில் உள்ள பகவதியம்மன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் கொங்குநாடு ரைபிள் கிளப்பில், அதன் நிறுவனர் செந்தில்குமார் உடன் இணைந்து, அஜித்குமார் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இலக்கை அஜித் குறிபார்த்து சுடும் காட்சிகள் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.

ajith kumar practicing with shotgun at kongunadu rifle club
ajith kumar practicing with shotgun at kongunadu rifle club