பைசன் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்.. மாரி செல்வராஜின் நெகிழ்ச்சி பதிவு.!!

Web Ads

பைசன் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

director mari selvaraj latest post update

director mari selvaraj latest post update

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தை பாராட்டி இருப்பதாக மாரி செல்வராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது மாரி வாழ்த்துக்கள் என சூப்பர் ஸ்டார் தெரிவித்துள்ளார்

இதனை அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் கர்ணன் மாமன்னன் வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த பட குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவை வெளியிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.