எனது தேனிலவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்: நடிகை திரிஷா பதிலடி..

Web Ads

அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது திரிஷா ‘கருப்பு’ திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், திரிஷாவுக்கு சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதாகவும், இது தொடர்பாக இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் வலைதளங்களில் தகவல் ஒன்று பரவியது.

இந்த தகவலுக்கு திரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். தனது பதிவில் அவர், ‘என்னுடைய வாழ்க்கையை எனக்காக மற்றவர்கள் திட்டமிடுவது எனக்கு பிடித்திருக்கிறது. தேனிலவைக் கூட அவர்கள் ஏற்பாடு செய்வதற்காக காத்திருக்கிறேன்’ என திரிஷா பதிவிட்டு உள்ளார். அவரது இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.

தற்போது திரிஷா ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘கருப்பு’ திரைப்படத்தை தொடர்ந்து நடிக்கும் தெலுங்கில் ‘சிரஞ்சீவி’ உடன் ‘விஸ்வாம்பரா’ படத்திலும் இணைந்துள்ளார். விரைவில் இந்த இரண்டு படங்களும் திரைக்கு வரவுள்ளன.

actress trisha shuts down marriage rumours
actress trisha shuts down marriage rumours