இன்பன் உதயநிதிக்கு வாழ்த்துகள்: தனுஷ் பதிவு..

Web Ads

தமிழ் சினிமாவில் பன்முகத்திறமையாளர் தனுஷ் என்பது தெரிந்ததே. அவ்வகையில், தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலர் நடித்துள்ளனர்.

அக்டோபர் 1-ல் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், இப்படத்தின் தமிழக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக, தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில்,

Web Ad 2

‘தமிழ்நாடு முழுவதும் ‘இட்லி கடை’ படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இன்பன் உதயநிதியின் புதிய பயணத்துக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக ஆனதை அடுத்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் பொறுப்பிலிருந்து விலகினார். இதனையடுத்து தற்போது, அந்த பொறுப்பை அவரது மகன் இன்பன் உதயநிதி பொறுப்பில் இருக்கிறார் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.