ராஜமௌலி-மகேஷ்பாபு படத்தின் போஸ்டர் வெளியீடு எப்போது?

Web Ads

ராஜமௌலி இயக்கத்தில் மபேஷ்பாபு நடிக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி, ஒரிசாவில் நிறைவடைந்துள்ளது. சமீபத்தில், படத்தின் முக்கிய காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டன.

தற்போது, அடுத்த கட்ட படப்பிடிப்பு நைரோபியில் நடத்த படக்குழு தயாராகி வருகிறது. மகேஷ் பாபுவும், பிரியங்கா சோப்ராவும் கென்யாவின் நைரோபியை அடைந்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் 9-ந்தேதி அன்று மகேஷ் பாபுவின் பிறந்தநாளுக்கு, ரசிகர்கள் படத்தின் முதல் பார்வை அல்லது க்ளிம்ப்ஸ் வெளியாகும் என எதிர்பார்த்தனர். ஆனால், வெளியாகவில்லை.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பார்வை க்ளிம்ப்ஸ் ‘Gen63’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது என்று கூறப்படுகிறது. ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், தனது ‘அவதார்: தி ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் விளம்பரத்திற்காக இந்தியா வர இருப்பதால், அவர் மூலம் இந்தக் க்ளிம்ப்ஸ் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என கூறப்படுகிறது. ‘அவதார்-3’ டிசம்பர் 19-ந்தேதி ரிலீஸாகிறது.

ss rajamouli and magesh babu movie poster release
ss rajamouli and magesh babu movie poster release