7 மாதங்களுக்கு பிறகு, மீண்டு வரும் டைகர்: மம்முட்டிக்கு, மஞ்சு வாரியர் வரவேற்பு..

Web Ads

தமிழ் சினிமாவில் அழகன், மறுமலர்ச்சி, கிளிப்பேச்சு கேட்க வா, தளபதி போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி என்பது தெரிந்ததே. தற்போது மம்முட்டி, மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

கடந்த 7 மாதத்துக்கு முன், இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, மம்முட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதனால், படப்பிடிப்பில் இருந்து அவர் விலகி இருப்பதாகவும் செய்திகள் பரவின.

இந்நிலையில், அவர் குணமடைந்து விட்டதாகவும் படங்களில் மீண்டும் நடிக்கத் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து ரசிகர்கள், திரைத்துறையினர், அரசியல்வாதிகள் அவருக்கு வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மோகன்லால், மம்முட்டிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை மட்டும் பதிவு செய்துள்ளார். ‘டைகரை மீண்டும் வரவேற்கிறோம்’ என மஞ்சு வாரியரும், ‘இந்தச் செய்தியைக் கேட்க நான் பிரார்த்தனை செய்தேன்’ என இயக்குநர் சிபி மலயிலும் தெரிவித்துள்ளனர். அவருக்கு என்ன பாதிப்பு என்பதை, மம்முட்டி தரப்பில் தெரிவிக்கவில்லை. இருப்பினும், அவர், நலமான வகையில் வரவேற்று மகிழ்வோம்.

mammootty is getting ready for shooting after 7 months
mammootty is getting ready for shooting after 7 months