‘நம்பர் கேம்’ ஒரு போதும் என் தந்தையை பாதிக்காது: ஸ்ருதிஹாசன் விளக்கம்..

சினிமாவில் எதிர்பாராது நிகழும் வெற்றி-தோல்விக்களில் கமலின் மனநிலை என்ன? என்பது குறித்து ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
‘நாயகன்’ படத்துக்கு பிறகு, இருபெரும் ஜாம்பவான்களான கமல், மணிரத்னம் இருவரும் இணைந்து எடுக்கப்பட்ட படம் ‘தக் லைஃப்’ பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி, அசோக் செல்வன் உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படம், எதிர்பாராத தோல்வியை தழுவியது.
இந்நிலையில், கடந்த வாரம் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில் பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். அவரின் கேரக்டருக்கு ரசிகர்கள் இடையில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
இச்சூழலில் ஸ்ருதி, ‘தக் லைஃப்’ படத்தின் தோல்வி கமலை பாதித்ததா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘சினிமாவில் வெற்றி தோல்வி என பல விஷயங்களை பார்த்தவர் எனது தந்தை கமல்ஹாசன். அதனால், தக் லைஃப் பட ரிசல்ட் அவரை பாதிக்கவில்லை.
அது மட்டுமில்லாமல், அவர் சினிமாவில் சம்பாதிக்கும் எல்லாத்தையும் சினிமாவிலேதான் போடுகிறார். கார் வாங்குவது, வீடு கட்டுவதற்கு ஆசைப்படுவது இல்லை. இதுபோன்ற நம்பர் கேம் எனது தந்தையை ஒருபோதும் பாதிக்காது’ என தெரிவித்துள்ளார் ஸ்ருதி.
முன்னதாக, இந்தியன்-2, தக் லைஃப் என அடுத்ததடுத்த தோல்விகளுக்கு பிறகு கமல், தனது அடுத்த படத்தை கண்டிப்பாக ஹிட்டாக்கி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
அவ்வகையில், பிரபல சண்டைக் கலைஞர்களான அன்பறிவ் சகோதரர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் கமல். இப்படத்தின் கதையை மெருகேற்றும் வேலையில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இப்படம், அதிரடி ஆக்சன் ஜானரில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
