Web Ad 2

ரஜினியின் ‘தர்பார்’ சல்மான்கானின் ‘சிக்கந்தர்’ தோல்விக்கு காரணம்: ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்..

Web Ads

ரஜினி நடித்த ‘தர்பார்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதேபோல் ‘சிக்கந்தர்’ படமும் ஆனது. இவ்விரு படங்களையும் இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ்.

‘தர்பார்’ பட தோல்விக்கு, மிக சீக்கிரமாக கதை எழுதியதும் காரணமாகி விட்டது என்றார். பின்னர் இவரது இயக்கத்தில், சல்மான் கான் நடித்த ‘சிக்கந்தர்’ வெளியானது. இதில் ராஷ்மிகா மந்தனா , பிரதீக் பப்பர், சத்யராஜ் என பலர் நடித்தனர்.

பிரம்மாண்ட ஆகசன் படமான இது வெற்றி பெறவில்லை. இந்நிலையில், இந்தப் படத்தின் தோல்வி குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவிக்கையில், ‘சல்மான்கானை வைத்து படப்பிடிப்பு நடத்துவது எளிதானதல்ல. அவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், பகலிலும் பொதுவெளியிலும் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை.

அவர் இரவு 8 மணிக்குத்தான் படப்பிடிப்புக்கு வருவார். காலையில் இருந்து நாங்கள் படப்பிடிப்பில் இருப்போம். ஒவ்வொரு இரவிலும் பகல்போல ‘செட்’ அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். எல்லாக் காட்சிகளையும் கிரீன் மேட், கிராபிக்ஸில் எடுத்தால் எப்படி இருக்கும்? ஆனால், இந்தக் கதை என் மனதுக்கு நெருக்கமானது’ என கூறியுள்ளார்.

முருகதாஸின் இந்தக் கருத்து, சல்மான்கான் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் செப்.5-ல் வெளியாகிறது.

ar murugadoss shares about sikander movie failure
ar murugadoss shares about sikander movie failure