தனிப்பட்ட முறையில் கமல் கேரக்டர், ரஜினி கேரக்டர் எப்படி?: சுதீப் கிச்சா பேச்சு, வைரல்..

Web Ads

கன்னடத்தில் பிரபல நடிகராக வலம் வரும் சுதீப் கிச்சா, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிக பிரபலமாகி உள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான நான் ஈ, விஜய்யின் புலி, கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘முடிஞ்சா இவன புடி’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவிலும் பிரபலமானவர் கிச்சா சுதீப்.

மேலும், சினிமா நட்சத்திரங்கள் விளையாடும் கிரிக்கெட் தொடரான சிசிஎல் மூலமும், குறிப்பாக சென்னை ரைனோஸ் மற்றும் கர்நாடகா அணிகள் மோதும் போட்டிகளின் மூலமும் பேர் பெற்றவர் சுதீப்.

இந்நிலையில் அவர், ரஜினி மற்றும் கமல் பற்றி பேசியுள்ள நிகழ்வு வைரலாகி உள்ளது. அவர் பேசியதாவது, ‘கமல் சாரிடம் அவ்வளவாக பேசியது கிடையாது. ஒருசில முறை தான் பேசியிருக்கிறேன்.

கமல் சார், என்னைப் பொறுத்தவரை ரொம்ப சீரியஸான ஆள். ஆனால், ரஜினி சார் ஜாலியாக பேசுவார். அவர் ஒரு குழந்தை மாதிரி. இந்த உயரத்தில் இருந்தாலும் அவர் பழகுவதை பார்த்தால், அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதே நமக்கு மறந்துவிடும். அந்தளவிற்கு எளிமையாக பழகுவார்.

நாம் பேசுவதை கூர்ந்து கவனிப்பார். நம்மை பற்றி அக்கறையாக விசாரிப்பார். அவரை பார்த்து வாழ்க்கையில் நாம் எப்படி இருக்கவேண்டும் என்பதை கற்றுக்கொள்ளலாம் என மிகவும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் கிச்சா சுதீப்.

இவர் மட்டுமல்ல, ரஜினியுடன் பழகிய அனைவரும் இதே கருத்தைதான் கடந்த 45 ஆண்டுகளாக பேசி வருகின்றார்கள். ரஜினி இதுவரை எந்த மேடையிலும் எந்த பேட்டியிலும் யாரையும் புண்படுத்தும் வகையில் பேசியது கிடையாது. ரஜினி ஒரு சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி, குறிப்பாக அவர் ஒரு சிறந்த மனிதராக இருக்கின்றார். அதன் காரணமாகத்தான் உலகளவில் கொண்டாடப்படுகின்றார்.

actor kiccha sudeep speaks high about rajinikanth
actor kiccha sudeep speaks high about rajinikanth