சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ படம்: இதோ முன்பதிவு வசூலும், முதல் நாள் கணிப்பும்..

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினி – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான ‘கூலி’ படம் இதோ வரும் 14-ந்தேதி ரிலீஸாகவுள்ளது.

இதனை முன்னிட்டு இப்படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் 8-ந்தேதி தொடங்கியது. தொடங்கிய ஒரு சில மணி நேரங்களிலேயே சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அனைத்து திரையரங்குகளும் புக் செய்யப்பட்டன.

கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ‘கூலி’ படம் அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டது. டிக்கெட் பெறுவதற்கு வாயிலில் கூட்டம் முண்டியடித்தது. ஒரு மணி நேரத்தில் கேரளாவில் ரூ.1 கோடிக்கு மேல் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் புக்மைஷோ தளத்தில் 3 லட்சத்து 76 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

கேரளாவில் ஒரு மணி நேரத்தில் மட்டுமே 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. உலக அளவில் ரூ. 50 கோடி வசூல் செய்திருக்கிறது. வெளிநாடுகளில் ரூ. 32.50 கோடிக்கு டிக்கெட் முன்பதிவு நடந்திருக்கிறது. இந்தியாவில் முன்பதிவு துவங்கிய 24 மணிநேரத்திற்குள் தமிழ்நாட்டில் ரூ. 7 கோடியும், கேரளாவில் ரூ. 4.50 கோடியும், கர்நாடகாவில் ரூ. 2 கோடியும் வசூல் செய்திருக்கிறது. தெலுங்கில் முன்பதிவில் ரித்திக் ரோஷனின் ‘வார்-2’ படத்தை ‘கூலி’ படம் முந்திவிடும் என்றே நம்பப்படுகிறது.

பட ரிலீஸுக்கு முன்பே ‘கூலி’ ரூ. 50 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்திருக்கிறது. டிக்கெட் முன்பதிவே அமோகமாக நடந்து வருவதால் ‘கூலி’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.100 கோடியை தொடுவது பெரிய விஷயமாகவே இருக்காது என கணிக்கப்படுகிறது. 14-ந்தேதி பார்க்கலாம், நாகர்ஜூனா சொன்னதுபோல 100 பாட்ஷா ஆன ‘கூலி’ படத்தை.!

coolie movie shatter record in ticket booking
coolie movie shatter record in ticket booking