விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ படம் கலெக்‌ஷன் விவரம்..

Web Ads

‘கிங்டம்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விமர்சனங்கள் சற்று கலவையாக வந்தாலும், விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய ட்ரீட் ஆக அமைந்துள்ளது. இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.31 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டாவின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையையும் கிங்டம் படைத்துள்ளது. அடுத்த மூன்று நாட்களில் கிங்டம் திரைப்படம் 100 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிங்டம் திரைப்படம் ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரிலீசுக்கு முன்பே பெற்றுள்ளது. அதுவும் 53 கோடிக்கு இதன் ஓடிடி உரிமம் விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது. முதல் நாளிலேயே இமாலய வசூலை வாரிக்குவித்துள்ள கிங்டம் திரைப்படம் வீக் எண்டிலும் நல்ல கலெக்‌ஷன் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் மட்டும் ஒரு மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. முதல் நாளே ஒரு மில்லியன் டாலர் வசூலித்த விஜய் தேவரகொண்டாவின் முதல் படம் இதுவாகும்.

vijay deverakonda starrer kingdom movie collection
vijay deverakonda starrer kingdom movie collection