‘மதராஸி’ படத்தின் கதைக்களம் என்ன?: ஏ.ஆர்.முருகதாஸ் வாய்ஸ்..

Web Ads

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம்
செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விரைவில் இப்படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு பணிபுரிந்து வருகிறது. இப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றி வருகிறார். இதனை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

’மதராஸி’ படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகாமல் இருந்தது. தற்போது, ‘கஜினி’ மாதிரி திரைக்கதையும், ‘துப்பாக்கி’ மாதிரி ஆக்‌ஷன் காட்சிகளும் இருக்கவேண்டும் என விரும்பினேன். இப்போது ’மதராஸி’ காட்சிகளைப் பார்க்கும்போது அப்படித்தான் இருக்கிறது’ என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். கஜினி மற்றும் துப்பாக்கி ஆகிய படங்கள் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது நினைவுகூரத்தக்கது.

அவ்வகையில் ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜாம்ப்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யா நடித்த கஜினி, விஜய் நடித்த துப்பாக்கி படம்போல மதராஸி மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

director ar murugadoss about madarasi plot
director ar murugadoss about madarasi plot