அஜித் நடிப்பில் படம் இயக்குவது எப்போது?: லோகேஷ் கனகராஜ் அப்டேட்ஸ்..

Web Ads

தமிழ்த் திரையுலகில் சூர்யா, விஜய், கமல் ஆகியோரை தொடர்ந்து தற்போது ரஜினி நடிப்பில் ‘கூலி’ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து, அஜித்துடன் எப்போது பணிபுரிவார்? என்ற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது. இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் கூறும்போது,

‘அஜித் உடன் பணிபுரிய இப்போது தான் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. அவருடன் படம் பண்ண வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அஜித் சாரை எனது ஆக்‌ஷன் காட்சிகளின் பக்கம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கான கதையும் 10 மாதங்களுக்கு முன்பு பேசியிருந்தோம்.

இப்போது, அஜித் சார் கார் ரேஸ் என்று பிஸியாக இருக்கிறார். நானும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறேன். அனைத்து கைகூடி வரும் சமயத்தில் அவரையும் இயக்குவேன்.

அஜித் சாரையும் இயக்கினால் மட்டுமே, அனைத்து நடிகர்களுடன் நான் பணிபுரிந்தது முழுமையடையும். அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா மூலமாக பேசிக் கொண்டிருக்கிறோம். இருவருடைய நேரமும் கைகூடி வரும்போது 100% படம் பண்ணுவேன். ஆனால் எப்போது என்பது தெரியாது’ என தெரிவித்துள்ளார். இதனால், தல ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

lokesh kanagaraj expresses plan to direct ajith kumar
lokesh kanagaraj expresses plan to direct ajith kumar