பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரஜினி காந்த், சாண்டி மாஸ்டர் போட்ட நெகிழ்ச்சி பதிவு.!!

Web Ads

பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் குறித்து சாண்டி மாஸ்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்

Sandy Master latest post about super star rajinikanth
Sandy Master latest post about super star rajinikanth

நடன இயக்குனர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் சாண்டி மாஸ்டர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள கூலி படத்தில் சிக்கிடு பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

Web Ad 2

தற்போது சாண்டி மாஸ்டரின் பிறந்தநாள் என்பதால் ரஜினிகாந்த் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த மாஸ்டர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.

இதில் எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்றும்,எனது இந்த ஆண்டு பிறந்தநாள் தலைவரின் ஆசியுடன் மிகவும் சிறப்பாக அமைந்ததாக கூறியுள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by SANDY (@iamsandy_off)