Web Ad 2

தனுஷின் ‘குபேரா’ படம்: முன்பதிவில் மந்தம்; முழு விவரம்

Web Ads

தனுஷின் ‘குபேரா’ பட முன்பதிவு நிலவரம் பற்றிக் காண்போம்..

தனுஷ் நடித்த ‘குபேரா’ படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், அப்படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த அப்டேட் இன்று வெளியாகியுள்ளது.

அதாவது, குபேரா படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், இப்படத்தின் ரன்னிங் டைமையும் வெளியிட்டுள்ளனர். அதன்படி 181 நிமிடம் ஓடும் படமாக குபேரா இருக்கும் என அறிவித்துள்ளனர். இப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணிநேரம் 1 நிமிடம். தனுஷின் கெரியரில் அதிக ரன்னிங் டைம் கொண்ட படமாக குபேரா அமைந்துள்ளது.

இந்நிலையில், குபேரா படத்தின் முன்பதிவு வசூல் நிலவரமும் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு மிகவும் மந்தமாகவே நடந்து வருகிறது. இப்படம் இதுவரை டிக்கெட் முன்பதிவு மூலம் உலகளவில் ரூ.3.5 கோடி வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது.

அதுவே தமிழ்நாட்டில் அதன் முன்பதிவு வசூல் இன்னும் ஒரு கோடியை கூட எட்டவில்லை. தற்போது வரை 65 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாக சினிடிராக் தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இது மிகவும் மந்தமான வசூல் என்றே கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசுக்கு முன்பே முன்பதிவில் குறைந்தபட்சம் 10 கோடியாவது வசூல் அள்ளிவிடுகின்றன. ஆனால், தனுஷின் குபேரா படம் அதில் பாதியை வசூலிக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

அப்படத்திற்கு பெரியளவில் ஹைப் இல்லாததே அதன் முன்பதிவு வசூல் சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ராயன் திரைப்படம் உலகளவில் ரூ.150 கோடி வசூலித்தது.