தீபாவளி பண்டிகையில், மோதும் 3 திரைப்படங்கள்…

Web Ads

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய கோலிவுட் வட்டாரத் தகவல்கள் பார்ப்போம்..

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது, முதன் முதலாக தீபாவளி வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது.

மேலும் சில படங்கள் தங்களது வருகையை உறுதிப்படுத்த இருக்கிறார்கள். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்து வரும் படமும் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. விரைவில் இறுதிகட்டப் படப்பிடிப்பை முடித்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குடன் கூடிய வெளியீட்டு தேதியினை அறிவிக்கவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் என தெரிகிறது. இதன் படப்பிடிப்பும் முடிவடைந்து, கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இபடத்தை லலித்குமார் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த 3 படங்கள் போக, மேலும், சில படங்கள் தீபாவளி வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜனநாயகன், பராசக்தி படங்கள் களத்தில் இறங்குகின்றன.

tamil films in diwali release race
tamil films in diwali release race