கூலி படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவல்.. ரசிகர்கள் அப்செட்..!

Web Ads

கூலிப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாக ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

News about the release of the movie Coolie has fans upset!
News about the release of the movie Coolie has fans upset!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவாகி வரும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரித்திக் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள வார் 2 திரைப்படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளதால் கூலி படத்தின் ரிலீஸில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூலி படத்தின் ரிலீஸ்க்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் அவர்களை அப்செட்டாக்கி இருக்கிறது என்றே சொல்லலாம்.

News about the release of the movie Coolie has fans upset!
News about the release of the movie Coolie has fans upset!