சிவகுமாரை சந்தித்த பிக் பாஸ் முத்துகுமரன்..வைரலாகும் போட்டோஸ்..!

சிவகுமாரை சந்தித்துள்ளார் பிக் பாஸ் முத்துக்குமரன்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்துள்ளது. சமீபத்தில் முடிந்த எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக முத்துக்குமரனும், ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். நிகழ்ச்சி முடிந்த பிறகும் போட்டியாளர்கள் அவர்களுடைய நட்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் முத்துக்குமரன் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட சிவகுமாரை சந்தித்துள்ளார். இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம், இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது மட்டும் இல்லாமல் முத்துக்குமரன் தீபக் வீட்டிற்கு சென்று அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram