நீண்ட வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் துருவ நட்சத்திரம்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் ஏழு வருடங்களுக்கு முன்பே வெளியாகும் என்று எதிர்பார்த்த திரைப்படம் துருவ நட்சத்திரம்.
கௌதம் மேனன் இயக்கத்திலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையிலும் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ரித்து வர்மா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் உறுதியாக ரிலீஸ் ஆகும் என்று அறிவித்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் தற்போது சமீபத்தில் கௌதம் மேனன் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து பேசி உள்ளார்.
அதில் படத்தின் மீது இருக்கும் பிரச்சனைகள் ஒன்றொன்றாக தீர்ந்து வருவதாகவும் வருகிற சம்மருக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என்ற தகவலையும் சொல்லி உள்ளார். இவர் சொன்ன இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான மதகஜராஜாவும் 13 வருடங்கள் கழித்து வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது.
