கல்லா கட்டுவதில் முந்துவது விக்ரம் படமா? ரவிமோகன் படமா? வெயிட்டிங்..

Web Ads

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ரவிமோகன் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர் என்பது தெரிந்ததே. ஆனால், தற்போதைய பாக்ஸ் ஆபீஸை பொறுத்தவரையில், ஒவ்வொருவர் படமும் களத்தில் எதிர்கொள்ளும் நிலைதான். இது குறித்த விவரம் பார்ப்போம்..

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘வீர தீர சூரன்’ படத்தின் 2-ம் பாகம் வருகிற மார்ச் மாதம் 28-ந் தேதி ரமலான் விடுமுறையை ஒட்டி ரிலீஸ் ஆகிறது. அதே தேதியில், ரவி மோகன் நடித்துள்ள ‘ஜீனி’ படமும் வரவுள்ளது.

இந்த இரண்டு படங்களும் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், இவை ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘வீர தீர சூரன்’ படத்தை அருண்குமார் இயக்கியுள்ளார். விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா வருகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் 2-ம் பாகம் தான் முதலில் ரிலீஸ் செய்ய உள்ளனர். அதைத்தொடர்ந்து முதல் பாகம் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

அதேபோல், ‘ஜீனி’ படத்தை இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அர்ஜுனன் இயக்கியுள்ளார். இப்படத்த ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில், ரவிமோகனுடன் கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி, வாமிகா கபி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில், விக்ரம் படம் ஆக்‌ஷனாகவும், ரவிமோகன் படம் ஃபேன்டஸியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இவையிரண்டில் எது நல்லா கல்லா கட்டும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

actors vikram and ravi mohan movies release in same date
actors vikram and ravi mohan movies release in same date